‘மருத்துவ சிகிச்சைக்காகவே வெளிநாடு சென்றேன்’ - மும்பை ஐகோர்ட்டில் மெகுல் சோக்சி மனு


‘மருத்துவ சிகிச்சைக்காகவே வெளிநாடு சென்றேன்’ - மும்பை ஐகோர்ட்டில் மெகுல் சோக்சி மனு
x
தினத்தந்தி 18 Jun 2019 12:15 AM IST (Updated: 17 Jun 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ சிகிச்சைக்காகவே தான் வெளிநாடு சென்றதாக, மும்பை ஐகோர்ட்டில் மெகுல் சோக்சி மனு அளித்துள்ளார்.

மும்பை,

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 400 கோடி கடன் மோசடி தொடர்பாக தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, அவருடைய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மீது அமலாக்க பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இதனால் இருவரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர்.

தற்போது ஆண்டிகுவா தீவில் இருக்கும் மெகுல் சோக்சி தன்னுடைய வக்கீல் மூலம் மும்பை ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த மனுவில், வழக்கு விசாரணைக்கு பயந்து நான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடவில்லை. மருத்துவ பரிசோதனை, சிகிச்சைக்காக தான் வெளிநாடு சென்றேன். என்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு தற்போது நான் இந்தியா திரும்ப இயலாது. மேலும் என்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் அமலாக்க பிரிவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.


Next Story