இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் ஐதராபாத்தில் 2 பேர் கைது


இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் ஐதராபாத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2019 2:25 AM IST (Updated: 18 Jun 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் ஆடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐதராபாத்,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை வைத்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சிலர் சூதாட்டம் நடத்துவதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்குள்ள ஜங்கூர் தஸ்தி, தூல்பேட் ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விஜேந்தர் சிங் (வயது 30), மகேஷ் சிங் (20) ஆகிய 2 வாலிபர்கள் சூதாட்டக்காரர்களை ஒருங்கிணைத்து பந்தயத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.53,970, 6 செல்போன்கள், ஒரு டி.வி. உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மங்கல்கட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story