டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது


டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 20 Jun 2019 4:16 PM IST (Updated: 20 Jun 2019 4:16 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் 9-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியது.

புதுடெல்லி,

டெல்லியில்  9-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.

ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த  செவ்வாய்க்கிழமை வரை 1.7 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story