பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக இலவச கல்வி; அசாமில் புது முயற்சி


பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக இலவச கல்வி; அசாமில் புது முயற்சி
x
தினத்தந்தி 20 Jun 2019 3:59 PM GMT (Updated: 20 Jun 2019 3:59 PM GMT)

அசாமில் புது முயற்சியாக பிளாஸ்டிக் பைகளை கொண்டு வரும் மாணவ மாணவியருக்கு அதற்கு பதிலாக இலவச கல்வி வழங்கப்படுகிறது.

கவுகாத்தி,

அசாமில் பமோஹி என்ற பகுதியில் அக்ஷர் போரம் என்ற பெயரில் பள்ளி கூடமொன்று இயங்கி வருகிறது.  இங்கு பயிலும் மாணவர்கள் தங்களது வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவு பொருட்களை கொண்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் புட்டிகளில் பிளாஸ்டிக் பைகளை போட்டு சுற்று சூழலுக்குகந்த செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன.  இவை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.  இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பதிலுக்கு மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது.

இதுபற்றி பள்ளி கூடத்தின் நிறுவனரான பர்மிடா சர்மா கூறும்பொழுது, மறுசுழற்சி மையம் உள்பட பல்வேறு வகையான தொழில் முறை சார்ந்த பயிற்சிளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.  ஒவ்வொரு வாரமும், 15 முதல் 25 பிளாஸ்டிக் பைகளை எங்களுடைய மாணவர்கள் கொண்டு வரவேண்டும்.  பல்வேறு சுற்றுச்சுழல் பிரச்சனைகளை பற்றி எங்களது குழந்தைகள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

Next Story