டெல்லியில் பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: மெட்ரோ ரெயில்கள் சேவை பாதிப்பு


டெல்லியில் பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: மெட்ரோ ரெயில்கள் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 5:42 AM GMT (Updated: 21 Jun 2019 5:42 AM GMT)

டெல்லியில் பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் மெட்ரோ ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் கலிண்டி கஞ்ச் பகுதியில் பர்னிச்சர் மார்க்கெட் ஒன்று உள்ளது.  இந்த மார்க்கெட்டில் இன்று அதிகாலை 5.55 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்த 17 தீ அணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த மார்க்கெட் பகுதியை ஒட்டி  மெட்ரோ ரெயில் செல்லும் தண்டவாளம் இருப்பதால், தீ விபத்தால் மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டன.  தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மெட்ரோ ரெயில் அதிகாரிகள், ரெயில் தண்டவாளத்தை ஆய்வு செய்து வருகின்றனர். 

டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,  “ஜசோல விஹார் ஷாஹின் பக் மற்றும் கலிண்டி கஞ்ச் இடையேயான மெட்ரோ ரெயில்கள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. புகை மற்றும் அடிப்பகுதியில்  தீ எரிந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story