டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம்: அய்யாக்கண்ணு பங்கேற்பு


டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம்: அய்யாக்கண்ணு பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Jun 2019 10:00 PM GMT (Updated: 22 Jun 2019 9:35 PM GMT)

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டத்தில், அய்யாக்கண்ணு பங்கேற்றார்.

புதுடெல்லி,

அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்குழு கூட்டம் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி வி.எம்.சிங் தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. ராஜு ஷெட்டி, யோகேந்திர யாதவ் மற்றும் தமிழகத்தில் இருந்து தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, காசிமாயன், ஜோதி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் 85 சதவீத மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் கிடையாது. ஆடு, மாடுகள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் சாகின்றன. கடன் வாங்கிய விவசாயிகளின் நகைகள் மற்றும் வயல்களை வங்கிகள் ஏலம் விடுகின்றன. வறட்சி தொடர்பாக 26-ந்தேதி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்கிறோம். “வறட்சியில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள், இல்லையென்றால் கைது செய்து சிறையில் அடையுங்கள்” என்று போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்றார்.

Next Story