பிரிவினைவாதிகள் பள்ளிகளை மூடிவிட்டு, தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர்: அமித்ஷா


பிரிவினைவாதிகள் பள்ளிகளை மூடிவிட்டு, தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர்: அமித்ஷா
x
தினத்தந்தி 2 July 2019 5:56 AM GMT (Updated: 2 July 2019 5:56 AM GMT)

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் பள்ளிகளை மூடிவிட்டு, தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:- “ ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்  என 130-க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகள் படிக்கின்றனர், சிலர் பணியாற்றுகின்றனர்.

என்னிடம் இது பற்றிய முழு தகவல் உள்ளது. ஆனால், நான் பெயர்களை வெளியிடப்போவது இல்லை. காஷ்மீரில் பள்ளிகளை மூட வேண்டும் என்றும் மாணவர்களை கற்களை எடுக்க தூண்டும் இவர்கள் தங்களுக்கு  வேண்டியவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒரு பிரிவினைவாதியின் மகன், சவூதி அரேபியாவில் மாதம் ரூ.30 லட்சம் சம்பளத்துக்கு பணியாற்றுகிறார்.  90 சதவீத பிரிவினைவாதிகளுக்கு வேண்டியவர்கள், பாகிஸ்தானிலோ, வளைகுடா நாடுகளிலோ பணியாற்றுகின்றனர். பாகிஸ்தானில் இருந்து வரும் நிதியை தடுக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்றார்.

Next Story