தொழில் அதிபர் பி.கே.பிர்லா மரணம்


தொழில் அதிபர் பி.கே.பிர்லா மரணம்
x
தினத்தந்தி 4 July 2019 3:15 AM IST (Updated: 4 July 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபர் பி.கே.பிர்லா மரணமடைந்தார்.

மும்பை,

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் பி.கே.பிர்லா. கொல்கத்தாவை சேர்ந்த இவர் வயது முதிர்வால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் மும்பை ஆஸ்பத்திரியில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98. பிர்லா குழுமங்களின் தலைவராக இருந்த அவர், பல்வேறு நிறுவனங்களின் தலைவராகவும் பதவி வகித்தவர். 15 வயது முதலே தொழில் துறையில் ஆர்வம் காட்டி ஜாம்பவனாக மாறியவர்.

அவரது உடல் கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று (வியாழக்கிழமை) தகனம் செய்யப்படுகிறது. பி.கே.பிர்லாவின் மனைவி சரளா பிர்லா 2015-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்த தம்பதிக்கு மஞ்சுஸ்ரீ, ஜெயஸ்ரீ என்ற மகள்கள் இருக்கின்றனர். பி.கே. பிர்லாவின் மகன் ஆதித்ய விக்ரம் பிர்லா கடந்த 1995-ம் ஆண்டு இறந்து விட்டார்.


Next Story