குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ராஜினாமா


குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ராஜினாமா
x
தினத்தந்தி 5 July 2019 6:45 PM GMT (Updated: 5 July 2019 5:54 PM GMT)

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ராஜினாமா செய்தனர்.

ஆமதாபாத்,

குஜராத்தில் நேற்று மாநிலங்களவை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ஜுக்லஜி தகோர் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சியோ சந்திரிகா சுதசமா, கவுரவ் பாண்டியா ஆகியோரை களமிறக்கி இருந்தது. சட்டசபை அலுவலகத்தில் நடந்த இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அல்பேஷ் தகோர், தவல்சின் ஜலா ஆகிய 2 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். முன்னதாக மாநிலங்களவை தேர்தலிலும் இவர்கள் 2 பேரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கே ஓட்டு போட்டதாக கூறப்படுகிறது.

2 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிய விவகாரம் குஜராத் காங்கிரசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story