தேசிய செய்திகள்

டெல்லியில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை 2 சுங்க அதிகாரிகளுக்கு சம்மன் + "||" + Panel summons customs officers accused of sexually assaulting Uzbek woman at Delhi airport

டெல்லியில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை 2 சுங்க அதிகாரிகளுக்கு சம்மன்

டெல்லியில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை 2 சுங்க அதிகாரிகளுக்கு சம்மன்
டெல்லியில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 2 சுங்க அதிகாரிகளுக்கு சம்மன் விடுக்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மே மாதம் தாஷ்கண்ட் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை அணுகிய 2 சுங்கத்துறை சூப்பிரண்டுகள், அவரது உடமைகளை பரிசோதிக்க வேண்டும் என்று கண்காணிப்பு கேமரா இல்லாத தனியறைக்கு அழைத்துச் சென்றனர். பெண் அதிகாரியை உடன் வைத்துக் கொள்ளாமல், சோதனை என்ற பெயரில் அவர்கள் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுங்க அதிகாரிகளிடம் உஸ்பெகிஸ்தான் பெண் புகார் கூறினார். 

ஆனால் போதைப்பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்படும் என மிரட்டப்பட்டதாகவும், அதனால் பின்வாங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், அம்பலமானதால், 2 அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ், இதுகுறித்து விசாரிக்க உள்மட்ட புகார்கள் குழு அமைக்கப்பட்டது. சிவில் கோர்ட்டு அதிகாரத்தில் அமைக்கப்பட்ட இக்குழு, குற்றம் சாட்டப்பட்ட 2 சுங்க அதிகாரிகளுக்கு ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. தங்கள் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சியில் பரபரப்பு தனியார் வங்கி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
பொள்ளாச்சியில் தனியார் வங்கி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. பாலியல் தொல்லை: போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி
பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியிட்டு தம்பதி தூக்கில் தொங்கினர். அதில் கணவன் உயிரிழந்தார். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. ஏற்காட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
ஏற்காட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
4. கிருஷ்ணகிரி அருகே திருமண ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி அருகே திருமண ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
5. ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை நிறுத்தம் :‘எங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ ஊழியர்கள் போராட்டம்
ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை நிறுத்தப்பட்டதை அடுத்து ‘எங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ என ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.