சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 18 July 2019 8:26 AM GMT (Updated: 18 July 2019 8:26 AM GMT)

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் இணையதளத்தில் தமிழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் மிகப்பெரும் ஆதரவு காணப்பட்டது

அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்ற தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் கட்டிடம் ஒன்றை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  திறந்து வைத்தார். அப்போது கன்னடம், அசாமீஸ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான 100 தீர்ப்புகளை நீதிபதி பாப்டே அவரிடம் வழங்கினார். அதில்  தமிழ் இடம் பெறவில்லை. இது தமிழர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  இன்று தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் 113 வழக்குகளின் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற இணையதளத்தில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தீர்ப்புகள் வெளியாகின. சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் வழக்கு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம்​ செய்யப்பட்டு உள்ளது.

Next Story