220 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெற வேண்டும் மராட்டிய பா.ஜனதா தீர்மானம்


220 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெற வேண்டும் மராட்டிய பா.ஜனதா தீர்மானம்
x
தினத்தந்தி 21 July 2019 12:24 PM GMT (Updated: 21 July 2019 12:24 PM GMT)

மராட்டிய மாநில சட்டசபைத் தேர்தலில் 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெற வேண்டும் என அம்மாநில பா.ஜனதா தீர்மானம் செய்துள்ளது.



288 தொகுதிகளைக் கொண்ட மராட்டிய சட்டசபைக்கு இவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத்தில் பா.ஜனதா தலைமையில் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மாநில பா.ஜனதா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. மாநிலத்தில் கூட்டணி கட்சிகள் உள்பட பா.ஜனதா 220 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என கூறப்பட்டுள்ளது.

 மாநில பா.ஜனதா மூத்த தலைவரும், நிதி அமைச்சருமான ஸ்ரீதர் முகந்திவார் பேசுகையில், வரும் தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 220க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெறும். காங்கிரஸ் ஒரு ஊழலால் புதைந்த கட்சியாகும், அதனால் பாரத தாய்க்கு கவலைகள் மட்டும்தான் மிஞ்சியது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஒரு மூழ்கும் டைட்டானிக் கப்லாகும். காங்கிரஸ் கட்சிக்கு தலைமையும் கிடையாது. மராட்டியத்தில் காங்கிரஸ் ஒரு தலைவரையும், 5 செயல் தலைவரையும் நியமனம் செய்துள்ளது, இதுயாருக்கும் பயனளிக்கப்போவது கிடையாது எனக் கூறியுள்ளார். 

Next Story