முத்தலாக் மசோதா: மக்களவையில் ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. மாநிலங்களவையில் எதிர்ப்பு


முத்தலாக் மசோதா: மக்களவையில் ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. மாநிலங்களவையில் எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 July 2019 9:54 AM GMT (Updated: 30 July 2019 9:54 AM GMT)

முத்தலாக் மசோதாவுக்கு மக்களவையில் அ.தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில் மாநிலங்களவையில் எதிர்ப்பு. முத்தலாக் மசோதா விவகாரத்தில் அ.தி.மு.க. நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

முத்தலாக் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்து பேசும்போது கூறியதாவது:-

 திருமணமான இஸ்லாமியப் பெண்களின் உரிமையைப் பாதுகாக்கும் ஒரே நோக்கில் மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவை அரசியல் ரீதியாகவும், வாக்கு வங்கி அரசியலாகவும் பார்க்கக்கூடாது.

இந்த மசோதா மனிதநேயம், மகளிரின் கவுரவத்துடன் தொடர்புடையது என்ற ரவிசங்கர் பிரசாத், ஆண்-பெண் பாகுபாட்டை நீக்கவும் மசோதா உதவும். இந்திய பெண்கள் இப்போது எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள்.  முத்தலாக் போன்ற வழக்கங்களால் பெண்கள் நடுத்தெருவில் விடப்படக் கூடாது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே முத்தலாக் தடை மசோதாவை அரசு கொண்டு வருவதாக  கூறினார்.

மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  முத்தலாக் மசோதா விவகாரத்தில் அ.தி.மு.க. நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

அதிமுகவின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும்  நவநீதகிருஷ்ணனும் ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர்.

முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:-

முத்தலாக் சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும். முத்தலாக் சட்ட மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என கூறினார்.

Next Story