5-வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2


5-வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2
x
தினத்தந்தி 6 Aug 2019 12:24 PM GMT (Updated: 6 Aug 2019 12:24 PM GMT)

சந்திரயான்-2 விண்கலம் 5-வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் முக்கிய அத்தியாயமான 'சந்திரயான் 2' ஜூலை 22-ஆம் தேதி  மதியம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 2008-ஆம் ஆண்டு இந்தியாவின் சார்பாக நிலவை பற்றி ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட 'சந்திரயான்-1'-யை தொடர்ந்து, சுமார் 11 வருடங்கள் கழித்து  'சந்திரயான் 2' விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவரை எந்த உலக நாடுகளும் செய்யாதவாறு நிலவின் தென்துருவத்தை இது ஆராய்ச்சி செய்யவுள்ளது. 

இந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு நிலவின் வட்டப்பாதையை சென்று அடையும். இதற்காக ஏற்கெனவே நான்கு முறை வட்டப் பாதை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3.04 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் 5-ஆவது மற்றும் கடைசி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

Next Story