நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது
நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி,
நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-1986 ஏற்கனவே அமலில் இருக்கிறது. இந்த சட்டத்துக்கு பதிலாக புதிய மசோதா ஒன்றை கடந்த மாதம் 8-ந் தேதி மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மக்களவையில் தாக்கல் செய்தார். நுகர்வோர் பாதுகாப்பு மசோதா 2019 என்று அழைக்கப்படும் இந்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது.
இந்த நிலையில் நேற்று இந்த மசோதா மீது மாநிலங்களவையில், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக அதிக வாக்குள் பதிவானதை தொடர்ந்து மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதா மூலமாக அமைக்கப்படும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், நுகர்வோரின் தனிநபர் புகார்களையும் உடனடியாக விசாரிக்கும். இதன் மூலம் தவறிழைப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதமும், 2 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

Related Tags :
Next Story