ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலையை ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைத்தார் ராணுவ தளபதி பிபின் ராவத்
ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி பிபின் ராவத் எடுத்துரைத்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இணைய-தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன. ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்தில் ஜம்மு-காஷ்மீர் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லையில் இருக்கும் நிலைக்குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியுள்ளார். நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது, பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என பிபின் ராவத் கூறியதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story