தேசிய செய்திகள்

மழை வெள்ளத்தால் பாதிப்பு: கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவும் - உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி + "||" + Impact of Rain Floods: Center will generously help Kerala - Home Minister Amit Shah confirmed

மழை வெள்ளத்தால் பாதிப்பு: கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவும் - உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி

மழை வெள்ளத்தால் பாதிப்பு: கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவும் - உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவும் என உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரள கவர்னர் பி.சதாசிவம் உள்துறை மந்திரி அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதம் குறித்து விளக்கி கூறினார். அப்போது, வெள்ள பாதிப்பில் இருந்து மீள கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவிகளை வழங்கும் என்று அவரிடம் அமித்ஷா உறுதி அளித்தார்.


வெள்ள சேத பாதிப்புகள் குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் உள்துறை மந்திரிக்கு, கேரள கவர்னர் விரைவில் அறிக்கை அனுப்ப இருக்கிறார்.

இந்த தகவலை கேரள அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.