தேசிய செய்திகள்

உயிருடன் எரித்து கொல்ல முயன்ற மனைவி; சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர் + "||" + Woman tries to burn hubby alive with help of paramour; held

உயிருடன் எரித்து கொல்ல முயன்ற மனைவி; சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்

உயிருடன் எரித்து கொல்ல முயன்ற மனைவி; சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்
கள்ளக்காதலருடன் சேர்ந்து உயிருடன் எரித்து கொல்ல முயன்ற மனைவியிடம் இருந்து சிந்தித்து செயல்பட்டு கணவர் உயிர் பிழைத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பால்கார் மாவட்டத்தின் மாணிக்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.  மனைவி (வயது 28) கள்ளக்காதலருடன் சேர்ந்து இருப்பது கணவருக்கு (வயது 35) பிடிக்கவில்லை.  தொடர்ந்து அதனை எதிர்த்து வந்துள்ளார்.

இதனால் அவரை கொலை செய்ய மனைவி முடிவு செய்துள்ளார்.  நேற்றிரவு கணவரின் கால்களை கட்டி போட்டு விட்டு கள்ளக்காதலர் உதவியுடன் சூடான எண்ணெயை கணவரின் தலை மற்றும் முகத்தில் ஊற்றியுள்ளார்.

இதன்பின் அவரது முகத்தில் சுத்தியலால் அடித்தும் உள்ளனர்.  அந்த நபர் தப்பி வெளியே சென்று விடாமல் இருவரும் தடுத்துள்ளனர்.  இதனால் அதிர்ந்து போன கணவர் சமையலறையில் இருந்த பாத்திரங்களை ஜன்னல் வழியே வெளியில் தூக்கி எறிந்துள்ளார்.

இதனை கண்ட அருகில் வசித்தவர்கள் உடனடியாக உதவிக்கு ஓடி வந்துள்ளனர்.  அந்த நபர் மீட்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  கணவரை கொல்ல முயன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் வீட்டில் தீப்பிடித்ததில் ஐக்கிய ஜனதா தள முன்னாள் பெண் எம்.எல்.ஏ. மற்றும் அவரது கணவர் காயம்
பீகாரில் வீட்டில் தீப்பிடித்ததில் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான அவரது மனைவி காயமடைந்தனர்.
2. திசையன்விளை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை
திசையன்விளை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
3. நீதிபதி கண் எதிரே மனைவியை கத்தியால் குத்திய கணவர் ஐகோர்ட்டில் பரபரப்பு
விவாகரத்து கிடைக்காமல் வழக்கு இழுத்தடிக்கப்பட்டதால், நீதிபதி கண் எதிரே மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம், மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
குடும்ப நடத்த வராததால் மனைவியை அரிவாளால் கணவர் வெட்டினார்.