தேசிய செய்திகள்

தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்தது + "||" + Indian Railways Thar Express train Jodhpur to Karachi stands cancelled till further orders

தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்தது

தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்தது
ஜோத்பூர் - கராச்சி இடையிலான தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு பதிலடி தருவதாக   இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில், தார் எக்ஸ்பிரஸ் ரெயில்  சேவையை பாகிஸ்தான் ரத்து செய்தது.  

பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் சாகித் ராஷித் இதுதொடர்பாக பேசுகையில், “தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையையும் ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். நான் ரெயில்வே அமைச்சராக இருக்கும் வரையில் இருநாடுகள் இடையே ரெயில்கள் இயக்கப்படாது” என்றார்.

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பர்மெர் இடையில் இயக்கப்படும் தார் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவையை இந்தியாவும் நிறுத்தியுள்ளது. அடுத்தக்கட்ட உத்தரவு வரும்வரையில் ரெயில்  சேவையை நிறுத்தி வைப்பதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் டெல்லி வந்தனர்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் இன்று காலை 6 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தனர்.
2. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தானில் நடைபெறும் - சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தகவல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெறும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
3. தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் - மத்திய மந்திரியிடம், ஜெகத்ரட்சகன் எம்.பி. கோரிக்கை
தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியிடம் ஜெகத்ரட்சகன் எம்.பி. நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
4. இந்திய பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது; மக்களவையில் பாஜக எம்.பி. குற்றச்சாட்டு
இந்திய பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் பாஜக எம்.பி. தெரிவித்தார்.
5. பயங்கரவாதத்தின் டி.என்.ஏ. பாகிஸ்தானிடம் உள்ளது : யுனெஸ்கோவில் இந்தியா பதிலடி
பயங்கரவாதத்தின் டி.என்.ஏ. பாகிஸ்தானிடம் தான் உள்ளது என்று யுனெஸ்கோவில் இந்தியா கடுமையாக சாடியது.