தேசிய செய்திகள்

குடிபோதையில் நடைபாதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் + "||" + Bengaluru: A drunk person drove his car over pedestrians on a footpath

குடிபோதையில் நடைபாதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர்

குடிபோதையில் நடைபாதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர்
கர்நாடகாவில் குடிபோதையில் நடைபாதையில் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் எச்.எஸ்.ஆர். பகுதியில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது.  திடீரென அந்த கார் சாலையோரம் திரும்பி அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு பின்னர் அருகில் இருந்த நடைபாதையில் ஏறி அங்கிருந்தவர்கள் மீது மோதியபடி நின்றது.

இதில் நடைபாதையில் இருந்த கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தோர், அந்த வழியே நடந்து சென்றோர் என ஆண்கள் மற்றும் பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.  அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.  இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...