தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு + "||" + A snake journey 5-day trip to the Metro Rail

மெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு

மெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு
மெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று 5 நாள் பயணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஐதராபாத்,

ஐதராபாத்தில் மெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று சுற்றி திரிவதாக சில நாட்களுக்கு முன்பு ‘போன்’ மூலம் பாம்புகள் நல அமைப்பு ஒன்றுக்கு தகவல் வந்தது. கடந்த 14-ந்தேதி அன்று பாம்பை மெட்ரோ ரெயிலில் மீண்டும் பார்த்தனர். இருப்பினும் அதை பிடிக்க முடியவில்லை. பின், பாம்புபிடி வீரர்கள் 5 நாட்கள் தீவிரமாக செயல்பட்டதன் மூலம், பாம்பை அவர்கள் பிடித்தனர்.


இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “தில்சுக்நகருக்கு அருகில் மெட்ரோ ரெயில் செல்லும்போது அந்த பாம்பை நாங்கள் கண்டுபிடித்து மீட்டோம். அது 2 அடி நீளம் இருந்தது. பின், வனத்துறையினரின் உதவியுடன் அதை காட்டுப்பகுதியில் விட்டுவிட்டோம்” என்றார்.

5 நாட்களாக மெட்ரோ ரெயிலில் கிட்டத்தட்ட 80 முறைக்கும் மேல் அந்த பாம்பு பயணம் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணம்: டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்த டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
2. சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் வந்த காட்டுநாயக்கர் மக்கள்
சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் காட்டு நாயக்கர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. 7 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் இருவழி சாலையாக மாறும் அண்ணாசாலை
மெட்ரோ ரெயில் பணிகளால் ஒருவழிச்சாலையாக்கப்பட்ட சென்னை அண்ணா சாலை 7 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் இருவழி சாலையாக மாறுகிறது.
4. மும்பை பெருநகர பகுதியில் மேலும் 3 மெட்ரோ ரெயில் வழித்தடம் : மாநில மந்திரி சபை ஒப்புதல்
மும்பை பெருநகர பகுதியில் மேலும் 3 மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் திட்டங்களுக்கு மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
5. ஒடிசாவில் பிடிபட்ட 11 அடி நீள அரிய வகை பாம்பு
ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.