ப.சிதம்பரம் கைது - தொண்டர்கள் மறியல்


ப.சிதம்பரம் கைது - தொண்டர்கள் மறியல்
x
தினத்தந்தி 21 Aug 2019 10:07 PM GMT (Updated: 21 Aug 2019 10:07 PM GMT)

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது அவரது தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

ப.சிதம்பரத்தை கைது செய்ய முடிவு செய்யப்பட்டதும் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிப்பட்டனர். சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு வந்து சிறிது நேரம் காத்து நின்றும் காம்பவுண்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் 3 அதிகாரிகள் சுவர் ஏறி உள்ளே குதித்தனர். அவர்கள் காம்பவுண்டு கதவை உள்ளிருந்து திறந்துவிட்டதும் மற்ற அதிகாரிகள் உள்ளே சென்றனர். சி.பி.ஐ. அதிகாரிகளுடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்றனர்.

ப.சிதம்பரத்தை கைது செய்து காரில் ஏற்றி அழைத்துச் சென்ற போது காங்கிரசார் அந்த காரை பலமாக தட்டியபடி பின்னால் ஓடினார்கள். தொண்டர்கள் சிலர் காரை வழிமறித்தனர். அவர்களை டெல்லி போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் நேராக ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு அவர் அங்கிருந்து சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தின் விருந்தினர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள 5-வது எண் அறையில் வைக்கப்பட்டார்.

Next Story