தேசிய செய்திகள்

ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி + "||" + MP: Woman gives birth to child on state highway

ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி

ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி
ஆம்புலன்சு வராத நிலையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு சாலையில் குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.
பர்ஹான்பூர்,

மத்திய பிரதேத்தின் பர்ஹான்பூர் பகுதியில் வசித்து வருபவர் கமலா பாய்.  இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  இந்த நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவரது கணவர் தொலைபேசி வழியே துணை செவிலியருக்கு அழைப்பு விடுத்து, எனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.  அதனால் உடனடியாக ஆம்புலன்சு ஒன்றை அனுப்பி வையுங்கள் என தகவல் தெரிவித்து உள்ளார்.

ஆனால் நெடுநேரம் ஆகியும் ஆம்புலன்சு வரவில்லை.  இதனால் அவர் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

எனினும், அந்த பெண்ணுக்கு வழியிலேயே பிரசவ வலி அதிகரித்தது.  அவருக்கு சாலையிலேயே பெண் குழந்தை ஒன்று பிறந்தது.  இதன்பின்பு ஷாபூர் சமூகநல மையத்திற்கு கமலா பாய் மற்றும் அவரது குழந்தை கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், இன்குபேட்டரில் இருந்த குழந்தை மீது எறும்புகள் ஊர்ந்ததால் தாய் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் இருந்த குழந்தையின் மீது எறும்புகள் ஊர்ந்து சென்றதால் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதனால் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் மருத்துவமனை கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கழிவறையில் வீசி சென்ற தாய்
கல்லக்குடியில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கழிவறையில் தாய் வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. 6 மாத கர்ப்பிணி வயிற்றில் ஒட்டி இருந்த இரட்டை குழந்தை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து எடுத்தனர்
நாகர்கோவிலில் 6 மாத கர்ப்பிணி வயிற்றில் ஒட்டியபடி இரட்டை குழந்தை இருந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் மூலம் இந்த குழந்தைகள் எடுக்கப்பட்டன.
4. குஜராத் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை துண்டித்த நர்ஸ்
குஜராத் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை நர்ஸ் ஒருவர் துண்டித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. ஜப்பானில் பயங்கரம்: மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி
ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்த விபத்தில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் ஒருவர் பலியானார்.