பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 25 Aug 2019 1:53 PM GMT (Updated: 25 Aug 2019 2:23 PM GMT)

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார். மேலும் உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில்,   உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் பி.வி.சிந்துவிற்கு வாழ்த்துகள்.  பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளார். பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என பதிவிட்டுள்ளார்.

Next Story