தேசிய செய்திகள்

தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி காஷ்மீர் குல்மார்க்கில் பலத்த பாதுகாப்பு + "||" + Gulmarg on high alert following Pakistan's bids to push militants

தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி காஷ்மீர் குல்மார்க்கில் பலத்த பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி காஷ்மீர் குல்மார்க்கில் பலத்த பாதுகாப்பு
தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை தொடர்ந்து சுற்றுலா தலமான காஷ்மீர் குல்மார்க்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஸ்ரீ நகர்

தீவிரவாதிகளை  எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவம்  தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தொடர்ந்து இந்திய ராணுவம் அதனை முறியடித்து வருகிறது.

பாரமுல்லா மாவட்டத்தில் காஷ்மீரின் அதிகம் பயணிகள் வரும்  சுற்றுலாத் தலமான குல்மார்க் கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாதிகள்  ஊடுருவல் முயற்சிகளுக்குப் பின்னர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

மேலும் பாகிஸ்தான் இராணுவம் பல முறை இந்திய எல்லைக்குள்   பல  தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக  இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குல்மார்க்கின் மேல் பகுதியில் உள்ள இராணுவத்தின் உஸ்தாத் மற்றும் குலாப்   முகாம்களில் பதுங்கியிருந்த ஆயுதமேந்தியவர்கள்  தாக்குதல் நடத்தியதாக  பாதுகாப்பு அமைப்புகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த  தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன, ஆனால் ஊடுருவியவர்கள் யார் என கண்டுபிடிக்கப்படவில்லை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் வசிக்கும் காலித் மற்றும் நாஜிம் ஆகிய இருவர் குல்மார்க் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு அமைப்புகளால் கைது செய்ய்யபட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் குல்மார்க்கில் படைகளை ஈடுபடுத்த பாகிஸ்தானின் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் குல்மார்க்கில் உள்ள பல ஒட்டல்களின் வளாகத்தை இராணுவம் முதன்முறையாக சோதனை நடத்தியது என  ஒரு ஓட்டல் உரிமையாளர் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் உள்ளூர் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெனீவாவின் மனித உரிமை அலுலகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ராணுவத்தை கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்
ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமை அலுவலகத்திற்கு வெளியே உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான் ராணுவம் என்று போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
2. இங்கிலாந்தில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் : இந்தியா விமர்சனம்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் - பாஜக தலைவர் ராம் மாதவ்
ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக தலைவர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.