இந்தியா - ரஷ்யா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி


இந்தியா - ரஷ்யா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 3 Sep 2019 3:41 PM GMT (Updated: 3 Sep 2019 3:41 PM GMT)

இந்தியா - ரஷ்யா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார்.

புதுடெல்லி, 

ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின்பேரில், அக்கூட்டத்தில் பங்கேற்க மோடி ரஷியாவுக்கு புறப்பட்டுச்சென்றார்.  ரஷ்யாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை நாளை சந்திக்கிறார். 

அதைத்தொடர்ந்து இருவரும் இருநாட்டு பிரதிநிதிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். வியாழக்கிழமை காலையில் பிரதமர் மோடி சில இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு,  வியாழக்கிழமை அவர் இந்தியாவுக்கு புறப்படுகிறார்.

Next Story