எங்கள் மாநிலத்தை நிர்மலா சீதாராமன் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் -சத்தீஸ்கார் முதல்வர்


எங்கள் மாநிலத்தை நிர்மலா சீதாராமன் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் -சத்தீஸ்கார் முதல்வர்
x
தினத்தந்தி 11 Sep 2019 5:29 AM GMT (Updated: 11 Sep 2019 5:29 AM GMT)

சத்தீஸ்கார் மாநிலத்தில் பொருளாதாரம் நன்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

ராய்பூர்,

மோட்டார் வாகன உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்த போது, பொதுமக்கள் பி.எஸ். 6 வாகனத்தை விரும்புவதாலும், பதிவு கட்டணம் உயர்வாலும், பணம்  வைத்திருப்பவர்கள் புதிதாக கார் வாங்குவதை விரும்பாமல் மெட்ரோ ரெயில் மற்றும் உபேர், ஓலா போன்ற வாடகை கார்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கார் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில், “உபேர், ஓலா போன்ற வாடகை கார் நிறுவனங்கள் சத்தீஸ்கார் மாநிலத்திலும் உள்ளன. ஆனால் இங்கு ஆட்டோமொபைல் துறை நன்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

எனவே நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்ய நிர்மலா சீதாராமன் சத்தீஸ்கார் மாநிலத்தின் பொருளாதாரத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் வேலை வாய்ப்புகளும் இங்கு அதிகரித்துள்ளது”என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த காலாண்டில் இந்தியாவில்  மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story