காஷ்மீரின் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்


காஷ்மீரின் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 12 Sept 2019 12:20 PM IST (Updated: 12 Sept 2019 12:45 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரின் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர்

அரசியல் சாசனம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது.  மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது என அறிவித்தது.

 காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியடைந்தது.

 இதனால் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டவும், பயங்கரவாதிகளை ஊடுருவ  செய்யவும் திட்டமிட்டு வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் காஷ்மீரின் எஸ்எஸ்பி கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.

Next Story