மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஆம்புலன்சிற்கு வழி ஏற்படுத்திய பொது மக்கள்- வைரலாகும் வீடியோ


மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஆம்புலன்சிற்கு வழி ஏற்படுத்திய பொது மக்கள்- வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 13 Sept 2019 12:12 PM IST (Updated: 13 Sept 2019 12:12 PM IST)
t-max-icont-min-icon

மகாராஷ்டிராவில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கொண்டு செல்லும் போது ஆம்புலன்சிற்கு பொதுமக்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மும்பை,

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லக்‌ஷ்மி சாலையில் நேற்று விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சாலை முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த நிலையில் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு கூட்டத்தில் இருந்த ஒரு பிரிவினர் வழி ஏற்படுத்தி கொடுத்தனர். 

இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story