தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட அமித்ஷா + "||" + Seva Saptah campaign launched to celebrate PM Modi's birthday-Amit Shah

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட அமித்ஷா

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட  அமித்ஷா
பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடியின் பிறந்த நாள் வரும் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பாஜக இன்று முதல் சேவை வாரம் கடைப்பிடிக்கிறது. இதைத் தொடங்கி வைக்கும் வகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறார்களுக்கு பழங்கள் அடங்கிய முடிப்புகளை வழங்கினர்.

பின்னர் அவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியிலும் ஈடுபட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமித்ஷா, "தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை தேசத்திற்காகவும், ஏழைகளுக்காகவும் அர்ப்பணித்த பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, சேவை வாரம் கொண்டாடப்படுவதாக" கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசின் வெளிப்படைத்தன்மை ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவையை குறைக்கும்- அமித் ஷா
அரசின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதின் மூலம் ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவை குறைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என அமித்ஷா கூறி உள்ளார்.
2. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக நேரு தான் காரணம் - மத்திய மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டு
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக காரணம் என மத்திய மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
3. பாஜக வெற்றி பெற புல்வாமா போன்ற தாக்குதல் தேவைப்படும் - சரத்பவார்!
மராட்டிய தேர்தலில், பாஜக வெற்றி பெற வேண்டுமானால் புல்வாமா போன்ற தாக்குதல்கள் மட்டுமே கைகொடுக்கும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
4. பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ; சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்
பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
5. டெல்லியில் காஷ்மீர் நிலவரம் குறித்து அமித்ஷா ஆலோசனை
காஷ்மீர் நிலவரம் குறித்து டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.