தேஜஸ் போர் விமானத்தில் பறந்த மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
தேஜஸ் போர் விமானத்தில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பறந்து சென்றார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று வருகை தந்துள்ளார். அவர், தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு சென்றார்.
இதன்பின் விமானத்தில் ஏறிய அவர் சுற்றியிருந்தவர்களை நோக்கி கைகளை அசைத்து பின்னர் புறப்பட தயாரானார். தேஜஸ் போர் விமானத்தில் அவருடன் விமான படை தளபதி என். திவாரி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ராஜ்நாத் சிங் விமானத்தில் பறந்து சென்றார். இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் முதல் மத்திய ராணுவ மந்திரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story