ஜம்மு காஷ்மீர்: இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் தடை நீக்கம்


ஜம்மு காஷ்மீர்: இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் தடை நீக்கம்
x
தினத்தந்தி 10 Oct 2019 4:01 PM IST (Updated: 10 Oct 2019 4:01 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் இரண்டு மாத தடைகளுக்கு பிறகு இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர்

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாப் பயணிகளை காஷ்மீரில் இருந்து  வெளியேறுமாறு ஆலோசனை வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மீண்டும்  சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 5 ந்தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை நீக்கிய பின் கடந்த 2 மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் இருந்தன  கடந்த இரண்டு மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய நிலையில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், ஆளுநரின் ஆலோசகர்கள், காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்  முழுமையாக நீக்கப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களாக வாடகை வாகன ஓட்டுனர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வந்தனர்.

சுற்றுலாவையே நம்பிய பல சிறுதொழில்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த 2 மாதங்களில் ஊடக செய்தியாளர்கள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story