இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு
ராஜஸ்தானில் ஒரே பிரசவத்தில் இளம்பெண் பெற்றெடுத்த 5 குழந்தைகளில் ஒன்று உயிரிழந்து உள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருபவர் ருக்ஷானா (வயது 25). கர்ப்பிணியான இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த சனிக்கிழமை சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் 5 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். குறை பிரசவத்தில் பிறந்த அவை அனைத்தும் உரிய எடை இன்றி இருந்துள்ளன. அவற்றில் ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்து விட்டது. மீதமுள்ள 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளன.
அந்த மருத்துவமனையின் பெண் மருத்துவர் ரஜோரியா கூறும்பொழுது, இது மிக அரிய நிகழ்வு. ஆனால் மருத்துவ வரலாற்றில் 2, 3, 4 குழந்தைகள் மற்றும் சில சமயங்களில் 9 குழந்தைகள் கூட பிறந்துள்ளன என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story