காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவின் கிரீடம் - பிரதமர் மோடி பேச்சு


காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவின் கிரீடம் - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2019 4:34 PM IST (Updated: 13 Oct 2019 4:34 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமான நிலம் மட்டுமல்ல அவை இந்தியாவின் கிரீடம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது.

மராட்டிய மாநிலத்தில் பிரதமர்  மோடியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் இன்று ஒரே நாளில் பிரசாரம் செய்கிறார்கள். 

இந்நிலையில், பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி  மராட்டியம் மாநிலம் ஜலாகானில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  பேசியதாவது:-

மராட்டியத்தில்  பட்னாவிஸ் தலைமையில் வலிமையான அரசு அமைய உங்களின் ஆதரவை கேட்க வந்துள்ளேன். கடந்த மக்களவை தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து  ஆதரவு தெரிவித்ததற்கும் நன்றி தெரிவிக்கவும் வந்துள்ளேன். புதிய இந்தியா வலிமையான இந்தியாவுக்காக நீங்கள் ஓட்டளித்தீர்கள் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகளை பார்த்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 

அரியானா, மராட்டியத்தில் மக்களவை தேர்தலில் அதிகளவு பெண்கள் வந்து வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டுவர நாட்டு மக்கள் அனுமதிப்பார்களா? காஷ்மீரில் மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டுவர எதிர்க்கட்சிகளுக்கு பலமிருக்கிறதா?  

370-வது பிரிவை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க துணிவிருக்கிறதா? ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாள்தோறும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. எங்களை பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல, இது இந்தியாவின் கிரீடம். காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அங்கு இன்னும் 4 மாதங்களில் இயல்பு நிலை திரும்பிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story