வீழ்த்தப்படவோ, விட்டு கொடுக்கவோ கூடாது; நாட்டின் கண்பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி
வீழ்த்தப்படவோ, விட்டு கொடுக்கவோ கூடாது என நாட்டின் கண்பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
மராட்டியத்தின் உல்லாஸ்நகரை சேர்ந்த இளம்பெண் பிரஞ்ஜால் பாட்டீல் (வயது 30). இவருக்கு 6 வயது இருந்தபொழுது, கண்பார்வையை இழந்து விட்டார். ஆனால் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து படித்து கடந்த 2016ம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்து கொண்டார். அதில் 773வது ரேங்க் பெற்றார்.
இதன்பின்பு தொடர்ந்து முயற்சி செய்து படித்து அடுத்த வருடம் 124வது ரேங்க் பெற்றார். கேரளாவின் எர்ணாகுளம் உதவி ஆட்சியராக பயிற்சி காலத்தில் அவர் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சி முடிந்து கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் சப்-கலெக்டராக இன்று பொறுப்பேற்று கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், நாம் ஒரு பொழுதும் வீழ்த்தப்பட கூடாது. ஒரு பொழுதும் விட்டு கொடுக்கவும் கூடாது. ஏனெனில், நாம் விரும்பிய ஒரு முன்னேற்றத்தினை நம்முடைய முயற்சிகளால் நாம் அனைவரும் பெறுவோம் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story