தேசிய செய்திகள்

டெல்லியில் மோசமான வானிலை: ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் + "||" + Bad weather in Delhi: Rahul Gandhi's helicopter landing in a hurry

டெல்லியில் மோசமான வானிலை: ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் மோசமான வானிலை: ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
டெல்லியில் மோசமான வானிலை காரணமாக, ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி,

அரியானா தேர்தலையொட்டி அங்குள்ள மகேந்திரகார் பகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் ஒன்று நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சோனியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பின்னர் அந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் டெல்லிக்கு வந்து கொண்டிருந்தார். ஆனால் டெல்லியில் மோசமான வானிலை நிலவியதால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாத சூழல் நிலவியது. எனவே அருகில் உள்ள ரெவாரியிலேயே அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.


பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராகுல் காந்தி டெல்லி திரும்பினார். முன்னதாக ரெவாரி பகுதியில் உள்ள சிறுவர்களுடன் ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்றும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. சுதந்திர தின விழா: டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு
நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லி முழுவதும் காவல்துறையினர் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
3. டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று மேலும் 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 707 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.