அரியானாவில் வாகன சோதனையில் காரில் இருந்து ரூ.1.33 கோடி பறிமுதல்


அரியானாவில் வாகன சோதனையில் காரில் இருந்து ரூ.1.33 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 20 Oct 2019 2:39 AM GMT (Updated: 20 Oct 2019 2:39 AM GMT)

அரியானாவில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடந்த வாகன சோதனையில் காரில் இருந்து ரூ.1.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சண்டிகர்,

90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.  வரும் 24ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.  தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

அரியானாவில் தேர்தல் பிரசாரத்திற்கான இறுதி நாளான நேற்று வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.  அங்கு ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனிடையே, குருகிராம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர்.  அதில் நடத்திய சோதனையில் ரூ.1.33 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அவற்றை காவல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இதுவே போலீசாரால் கைப்பற்றப்பட்ட மிக பெரிய தொகையாகும்.

அரியானாவில் இதுவரை வருமான வரி துறை, காவல் துறை மற்றும் கலால் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மதுபானம், போதை பொருட்கள் மற்றும் ரூ.23 கோடியே 52 லட்சத்து 13 ஆயிரத்து 408 மதிப்பிலான சட்டவிரோத பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன என இணை தலைமை தேர்தல் அதிகாரி இந்தர் ஜீத் தெரிவித்து உள்ளார்.

Next Story