காஷ்மீருக்குள் தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்கலாம்-ஐரோப்பிய குழு எம்.பி


காஷ்மீருக்குள் தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்கலாம்-ஐரோப்பிய குழு எம்.பி
x
தினத்தந்தி 30 Oct 2019 9:39 AM GMT (Updated: 30 Oct 2019 9:39 AM GMT)

காஷ்மீருக்குள் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை அனுமதிக்கும் அரசு, தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய குழுவைச் சேர்ந்த எம்பி ஒருவர் கூறினார்.

ஸ்ரீநகர்

காஷ்மீரின்  கள நிலவரம் பற்றி அறிவதற்காக, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 23  எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

பின்னர் இவர்கள் துணை ஜனாதிபதி  வெங்கய்யா நாயுடு  தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்து பேசினர். அவர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.   

கள நிலவரம் குறித்து ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 23 எம்.பி.க்கள் அடங்கிய குழு நேற்று  ஆய்வு செய்தது. பின்னர் இந்த குழுவினர் ஸ்ரீநகரில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்

பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நிக்கோலாஸ் பெஸ்ட் கூறும் போது, 

ஜம்மு-காஷ்மீருக்குள் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை அனுமதிக்கும் அரசு, தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்கலாம்; இதுகுறித்து அரசு தரப்பு பரிசீலிக்க வேண்டும். ஒருவித ஏற்றத்தாழ்வு உள்ளது, அரசாங்கம் அதை எப்படியாவது தீர்க்க வேண்டும்  என கூறினார்.

Next Story