ஆந்திர பிரதேசத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வர்த்தக மையம் கண்டுபிடிப்பு


ஆந்திர பிரதேசத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வர்த்தக மையம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2019 4:27 PM GMT (Updated: 31 Oct 2019 4:27 PM GMT)

ஆந்திர பிரதேசத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வர்த்தக மையம் ஒன்று தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஆந்திர பிரதேசத்தின் நெல்லூரில் நாயுடுபேட்டா பகுதி அருகே கொட்டிபுரலு என்ற இடத்தில் இந்திய தொல்லியல் துறை முதற்கட்ட ஆய்வு பணியை மேற்கொண்டது.  இதில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கற்களால் கட்டப்பட்ட அமைப்பு ஒன்றும், விஷ்ணு சிலை ஒன்றையும் குழுவினர் கண்டறிந்தனர்.

இதில் பல கலை பொருட்களும் வெளியே எடுக்கப்பட்டன.  தொடக்க காலத்திற்கு உட்பட்ட பல்வேறு மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  இதுபற்றிய ஆய்வு மேற்கொண்டதில், இந்த இடம் கடல்வழி வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒன்றாக இருந்திருக்கும் என தெரிய வந்துள்ளது.  தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், வர்த்தக மையமாக செயல்பட்ட இந்த பகுதியை பற்றிய சுவாரசிய உண்மைகள் தெரிய வரும் என குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த பகுதியில் செம்பு மற்றும் காரீய பொருட்களால் ஆன நாணயங்கள், இரும்பினால் ஆன ஈட்டி, டெரகோட்டா விதைகள், கற்களால் ஆன காதணிகள் உள்ளிட்ட மற்ற கலை பொருட்களும் கிடைத்துள்ளன.  தொடர்ந்து இந்த பகுதியில் புவியியல், ரசாயன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Next Story