பிரதமர் மோடியுடன் லடாக் துணை நிலை ஆளுநர் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் லடாக் துணை நிலை ஆளுநர் சந்திப்பு
x
தினத்தந்தி 6 Nov 2019 1:55 PM GMT (Updated: 6 Nov 2019 1:55 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடியை லடாக் துணை நிலை ஆளுநர் ஆர்.கே. மாதுர் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி, 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு,  அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அக்டோபர் 31 ஆம் தேதி முதல் செயல்பட துவங்கியது. 

இதையடுத்து, இரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்களை மத்திய அரசு நியமித்தது. சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு  கிரீஷ் சந்திர முர்மு  துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆர்.கே. மாதுர் நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் கடந்த 31 ஆம் தேதி துணை நிலை ஆளுநர்களாக பதவியேற்றுக்கொண்டனர். 

இந்த நிலையில்,  பிரதமர் மோடியை லடாக்  துணை நிலை ஆளுநர் ஆர்.கே. மாதுர் சந்தித்து பேசினார். முன்னதாக நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் லடாக் துணை நிலை ஆளுநர் சந்தித்து பேசியிருந்தார். 

Next Story