சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை


சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2019 10:39 AM GMT (Updated: 7 Nov 2019 10:39 AM GMT)

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வுபெறுவதால் அதற்கு முன்னர் தீர்ப்பை பிறப்பிக்க உள்ளார்.

இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட பின்னர் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்படி அந்த சுற்றறிக்கையில்  வலியுறுத்தப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு மட்டும் பாதுகாப்புக்காக 4,000 மத்திய போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

Next Story