துபாயில் இருந்து வெங்காயம் இறக்குமதி


துபாயில் இருந்து வெங்காயம் இறக்குமதி
x
தினத்தந்தி 9 Nov 2019 1:47 AM IST (Updated: 9 Nov 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

உள்நாட்டில் வெங்காய உற்பத்தி குறைந்துள்ள நிலையில் அதன் விலை உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.100 வரையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

இதையடுத்து விலையை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை தனியார் மூலம் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தார். இந்த நிலையில், துபாய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை கணிசமாக இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடுதல் அளவில் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு டெண்டரை அரசு நிறுவனமான எம்.எம்.டி.சி. வெளியிட்டுள்ளது. இநத தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2 ஆயிரம் டன் வெங்காய இறக்குமதிக்கு எம்.எம்.டி.சி., டெண்டர் வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

Next Story