2 விமானிகளுக்கு 3 மாதம் தடை


2 விமானிகளுக்கு 3 மாதம் தடை
x
தினத்தந்தி 17 Nov 2019 1:00 AM IST (Updated: 17 Nov 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டாளர் உத்தரவுக்கு செவிசாய்க்காத காரணத்தால் 2 விமானிகளுக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூலை 14-ந் தேதி ஒரு இன்டிகோ விமானம் ஆமதாபாத்துக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது கட்டுப்பாட்டாளர் அந்த விமானத்தை சற்று நேரம் நிறுத்திவைக்க உத்தரவிட்டார். ஆனால் அதற்கு செவிசாய்க்காத விமானிகள் அந்த விமானத்தை முன்புறம் நகர்த்தினார்கள். இதனால் ஓடுபாதையில் சில நெருக்கடிகள் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகம் அந்த விமானிகள் எலிடாம் டாடியு சூஸ், அனிகெட் சுனில் ஜோஷி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. விமானிகளும் தங்கள் கவனக்குறைவு என ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 விமானிகளின் அனுமதியை 3 மாதங்களுக்கு ரத்து செய்து டைரக்டர் ஜெனரல் அலுவலகம் உத்தரவிட்டது. இதனால் அவர்கள் 3 மாதங்களுக்கு விமானத்தை இயக்க முடியாது.


Next Story