அய்யப்ப பக்தர்களை 480 கி.மீ. பின் தொடர்ந்து சென்ற நாய்


அய்யப்ப பக்தர்களை 480 கி.மீ. பின் தொடர்ந்து சென்ற நாய்
x
தினத்தந்தி 18 Nov 2019 5:38 AM GMT (Updated: 18 Nov 2019 5:38 AM GMT)

அய்யப்ப பக்தர்களை நாய் ஒன்று 480 கி.மீ. பின் தொடர்ந்து சென்ற ஆச்சரியம் நடந்துள்ளது.

திருமலை,

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.  சபரிமலையில் புனிதமாக கருதப்படும் 18 படிகளுக்கு படிபூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

ஆந்திர பிரதேசத்தில் திருமலை பகுதியில் அய்யப்ப பக்தர்கள் 13 பேர் விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி கொண்டு கடந்த அக்டோபர் 31ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நடைபயணம் ஆக புறப்பட்டனர்.

அவர்கள் முதலில் கர்நாடகாவின் சிக்மகளூரு மாவட்டத்தின் கொட்டிகெஹரா பகுதிக்கு வந்துள்ளனர்.  அவர்களை நாய் ஒன்று 480 கி.மீ. கடந்து பின்தொடர்ந்து வந்துள்ளது.

இதுபற்றி அய்யப்ப பக்தர்களில் ஒருவர் கூறும்பொழுது, முதலில் அதனை நாங்கள் கவனிக்கவில்லை.  பின்னர் எங்கள் பயணத்தில் அது தொடர்ந்து எங்களுடனேயே நடந்து வந்தது.  நாங்கள் எங்களுக்காக தயார் செய்யும் உணவை அதற்கு வழங்கினோம்.  ஒவ்வொரு வருடமும் நாங்கள் சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொள்கிறோம்.  ஆனால் இப்படி எதுவும் நடந்ததில்லை.  இது ஒரு புதிய அனுபவம் என கூறினார்.


Next Story