தேசிய செய்திகள்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் டெல்லி வந்தனர் + "||" + 150 Indians Deported From US Over Visa Violations Land At Delhi Airport

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் டெல்லி வந்தனர்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் டெல்லி வந்தனர்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் இன்று காலை 6 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தனர்.
புதுடெல்லி,

விசா விதிகளை மீறியது அல்லது அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக ஊடுருவியது  தொடர்பான குற்றச்சாட்டுக்களில் சிக்கிய 150  இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 150 பேரும் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். வங்காளதேசம் வழியாக புதுடெல்லி விமான நிலையத்திற்கு இன்று காலை 6 மணிக்கு விமானம் வந்து சேர்ந்தது.  

விமான நிலையத்தில், 150 இந்தியர்களிடமும் குடியேற்ற துறை அதிகாரிகள் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காலை 11 மணி முதல் ஒவ்வொருவராக வெளியில் அனுப்பப்பட்டு வருவதாக   விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி, அமெரிக்காவிற்குள் ஊடுருவும் நோக்கில் மெக்சிகோவிற்குள் சட்டவிரோதமாக சென்ற 300 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது நினைவிருக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் - அமெரிக்கா
இந்தியா தனது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
2. அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள் - வியப்பில் ஆழ்ந்த மக்கள்
அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்களை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
3. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு 10 ஆயிரம் அமெரிக்க தாக்குதல் துப்பாக்கிகளை வாங்கிய இந்தியா
ரூ.700 கோடிக்கு 72 ஆயிரம் அமெரிக்க தயாரிப்பு தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியா ஒப்பந்தம் செய்து உள்ளது.
4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது
தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
5. அமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்
அமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு வாழைப்பழம் ஒன்று ஏலம் போனது.