தேசிய செய்திகள்

அந்தமானில் கர்ப்பிணிக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை + "||" + Indian Navy comes to rescue of woman in emergency labour in remote Andaman village

அந்தமானில் கர்ப்பிணிக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை

அந்தமானில் கர்ப்பிணிக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை
அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு இந்திய கடற்படை பிரசவகால உதவி செய்துள்ளது.
புதுடெல்லி,

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான கமோர்டா தீவில் கமோர்டா என்ற உள்ளடங்கிய கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் வசித்து வந்துள்ளார்.  அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டு உள்ளது.  இதனை அறிந்து கார்தீப் இந்திய கடற்படை தளத்தில் உள்ள கப்பலில் இருந்து அதிவேக படகு ஒன்று உடனடியாக கிராம பகுதிக்கு சென்று அந்த பெண்ணை மீட்டது.  இதன்பின்பு அந்த படகிலேயே அவருக்கு பிரசவம் நடந்தது.  குழந்தையும் பிறந்துள்ளது.  இருவரும் நலமுடன் உள்ளனர்.

இதனை அடுத்து படகு தீவு பகுதிக்கு வந்து சேர்ந்தது.  அங்கிருந்த சமூக சுகாதார மையத்தில் இருவரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள்
இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
2. இந்திய கடற்படை எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
இந்திய கடற்படை எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
3. இலங்கையில் தவித்தபோது இந்திய கடற்படை கப்பல் மீட்டது மட்டற்ற மகிழ்ச்சி சொந்த ஊருக்கு திரும்பிய பயணிகள் உற்சாகம்
இலங்கையில் தவித்தபோது, இந்திய கடற்படை கப்பல் மீட்டது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என்று கப்பலில் சொந்த ஊருக்கு திரும்பிய பயணிகள் உற்சாகத்துடன் கூறினர்.