தேசிய செய்திகள்

பாஜக வேட்பாளரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் + "||" + WB BJP leader manhandled allegedly by TMC workers during Karimpur by-poll

பாஜக வேட்பாளரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்

பாஜக வேட்பாளரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்
மேற்கு வங்காளத்தில் பாஜக வேட்பாளரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
கொல்கத்தா

மேற்கு வங்காள மாநிலம் கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் வாக்குபதிவு  நடைபெற்றது. இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான ஜாய் பிரகாஷ் மஜூம்தார், நாடியா மாவட்டத்தில் காரில் சென்றார்.

காரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வழிமறித்ததால், கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அவரை, செடி கொடிகளுக்குள் பிடித்து தள்ளிய திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை, காலால் எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார்.

இதைக் கண்ட பாதுகாப்புப் படையினர் திரிணாமுல் காங்கிரசாரை விரட்டியடித்தனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 2,816 பேருக்கு தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 2,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மேற்கு வங்காளத்தில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 2,752 பேருக்கு தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 2,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மே.வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
4. சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்-வாகனங்களுக்கு தீ வைப்பு
மேற்கு வங்காளத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும்"- மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்
கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் கூறியுள்ளார்.