நாடாளுமன்றத்தில் கம்பெனி வரி குறைப்பு மசோதா தாக்கல்


நாடாளுமன்றத்தில் கம்பெனி வரி குறைப்பு மசோதா தாக்கல்
x
தினத்தந்தி 25 Nov 2019 6:57 PM GMT (Updated: 25 Nov 2019 6:57 PM GMT)

நாடாளுமன்றத்தில் கம்பெனி வரி குறைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

பொருளாதார மந்தநிலையில் இருந்து பெருநிறுவனங்களை மீட்பதற்காக, கடந்த செப்டம்பர் 20-ந் தேதி கம்பெனி வரி குறைக்கப்பட்டது. கம்பெனி வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அப்போது, நாடாளுமன்ற கூட்டம் நடக்காததால், இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், அவசர சட்டத்துக்கு மாற்றாக, நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதாவை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

Next Story