மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு போலீசார் சம்மன்


மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு போலீசார் சம்மன்
x
தினத்தந்தி 29 Nov 2019 5:26 AM GMT (Updated: 29 Nov 2019 5:26 AM GMT)

மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மும்பை,

மராட்டிய முன்னாள் முதல் மந்தி தேவேந்திர பட்னாவிஸ், தற்போது நாக்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் கடந்த 1996  மற்றும் 1998 ஆகிய  தேர்தல்களின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனக்கு எதிராக உள்ள குற்ற வழக்குகள் குறித்த  விவரங்களை மறைத்ததாகவும் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் உகே என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மும்பை உயர்நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மனுவை  விசாரணைக்கு ஏற்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நாக்பூர் போலீசார் தேவேந்திர பட்னாவிசின் இல்லத்திற்கு சென்று சம்மனை வழங்கினர்.

Next Story