தேசிய செய்திகள்

பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது -பாத்திமாவின் தந்தை + "||" + In addition to 3 professors in Fatima's suicide 7 students are also involved - Fatima's father

பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது -பாத்திமாவின் தந்தை

பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது -பாத்திமாவின் தந்தை
பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளது என பாத்திமா தந்தை தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

சென்னை ஐஐடியில் கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாத்திமாவின் தந்தை அப்துல் லத்திப் அண்மையில் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமியை சந்தித்து தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விசாரணை சரியான முறையில் நடக்கவேண்டும் என வலியுறுத்தினேன். தேவைப்பட்டால் சிபிஐ  விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற உதவுவதாக தெரிவித்தார். பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.

மகளின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரிக்கை வைத்தேன். மகள் தொடர்பான ஆதாரங்களை கோட்டூர்புரம் போலீஸ் அழித்துவிட்டது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐஐடி மாணவி தற்கொலை சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
2. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன்
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
3. எனக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் மகளை அனுப்பினேன் -பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்
எனக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் மகளை அனுப்பினேன் என பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கூறினார்.
4. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: தோழிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள்
சென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது தோழிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்
சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தற்கொலைக்கு உதவி பேராசிரியர்களே காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.